ஜெயம் ரவி காலில் விழுந்தாரா ஆர்த்தி? ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பில் சமரசம்!
Author: Udayachandran RadhaKrishnan21 December 2024, 5:44 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார்.
இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சினிமாக்காரர்கள் என்றால் விவாகரத்து சகஜம் தான் என்ற பேச்சும், அதற்கேற்றவாறு பிரபலங்களின் விவாகரத்து செய்திகளும் தொடர்ச்சியானது.
கடந்த செப்டம்பர் மாதம், ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
குடும்ப நலன் கருதியே இந்த முடிவு எடுத்ததாக ஜெயம் ரவி கூறினாலும், ஆர்த்தி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னுடைய விளக்கத்தை ஒரு அறிக்கையாக வெளியிட்டார்.
தன் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ தயாராக இருப்பதாகவும், சட்டம் தனது போராட்டத்திற்கு துணை நிற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்க: ஜெப்ரிக்குனா மட்டும் எல்லாரும் வந்திருப்பாங்க.. பிக் பாஸ் போட்டியாளர்களை மிரள வைத்த VJS!
இதற்கு பின்னர், ஜெயம் ரவி, தன் மனைவி தன்னிடம் இருந்த அனைத்தையும் பறிப்பதாகவும், அவர் தற்போது சென்னையின் அடையாறில் உள்ள அவரது பெயரில் பதிவு செய்யப்பட்ட வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
இந்நிலையில், ஜெயம் ரவி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி, விவாகரத்து கோரினார். இந்த வழக்கின் விசாரணையை பார்க்கும் குடும்ப நல நீதிமன்றம், இருவரையும் மனம் விட்டு பேசும் வகையில் அறிவுரை வழங்கியது.
இருவரும் ஒரு மணி நேரம் பேசியதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவியை விட ஆர்த்தி மீண்டும் சேர்ந்து வாழ தயாராக உள்ளதாகவும், இதற்காக ஆர்த்தி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
இந்த விவாகரத்து வழக்கு குறித்து மத்தியஸ்தர் தரப்பில் இருந்து சமரச பேச்சு வார்த்தை முடியவில்லை என்றும், இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இருக்கக்கூடும் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.