படம் தோல்விக்கு நான் தான் காரணமா…ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்த ஜெயம் ரவி..!
Author: Selvan13 January 2025, 9:02 pm
பல அதிரடி முடிவுகளை எடுத்த ஜெயம் ரவி
தமி சினிமாவில் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் பல வெற்றிபங்களை கொடுத்தவர் ஜெயம் ரவி.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவருடைய படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை என கருத்து நிலவி வருகிறது.
சமீபத்தில் கூட இவருடைய நடிப்பில் தீபாவளி அன்று வெளிவந்த பிரதர் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது.இதனால் பலரும் இவரை ஹீரோவாக நடிக்க வைக்க யோசித்து வரும் நிலையில்,தற்போது சுதா கொங்கரா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.மேலும் இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படம் நாளை ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதையும் படியுங்க: கல்யாணம் எப்போ? எனக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ளது…ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஓவியா..!
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி,தன்னுடைய பட தோல்விகளை குறித்து ரசிகர்களிடம் பேசினார்.அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு எனக்கு சரியான ஆண்டாக அமையவில்லை,அந்த ஆண்டில் நடித்த அணைத்து படங்களும் தோல்வி அடைந்தன,அப்போது நான் ஏதும் தவறு செய்கிறானா இல்லை தவறான கதையை தேர்வு செய்து நடிக்கிறானா என்று எனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருப்பேன்,அதன் பின்பு அடுத்த ஆண்டிலே தனி ஒருவன்,பூலோகம், ரோமியோ ஜூலியட் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்தேன்.
இதன் மூலம் தோல்வியை கண்டு நாம எப்போதும் துவண்டு போகாமல் அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்ற முடிவு எடுத்தேன்,அதே மாதிரி இந்த ஆண்டும் எனக்கு நல்ல வெற்றிப்படங்கள் அமையும்,வரக்கூடிய படங்களிலும் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என அந்த நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.
மேலும் தற்போது தன்னுடைய ரசிகர்களிடம் ஒரு அன்பு கட்டளை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் என்னை ஜெயம் ரவி என்று கூப்பிட வேண்டாம் எனவும் ரவி அல்லது ரவி மோகன் என்று என்னை இனிமேல் கூப்பிடுங்கள் என தெரிவித்துள்ளார்.