ஜெயம் ரவி போட்ட கண்டிஷன்கள்…அதிர்ச்சியில் படக்குழு..!சிவகார்த்திகேயனுக்கு பதிலடியா.?
Author: Selvan26 November 2024, 2:30 pm
புறநானுறு படத்தில் வில்லனாக ஜெயம் ரவி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் புறநானூறு. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம்ரவி,ஸ்ரீலீலா,அதர்வா ஆகியோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
இப்படத்தை தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிக்கடை படத்தைத் தயாரிக்கும்,டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை இயக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர் .
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக யாரை போடுவது என்று படக்குழு தேடிய போது முதலில் விஷாலை தேர்வு செய்தனர். ஆனால் அவர் மிக பெரிய தொகையை சம்பளமாக கேட்டதால் படக்குழு மறுத்தது.இதனையடுத்து ஜெயம்ரவியை வில்லனாக நடிக்க தேர்வு செய்தனர்.அவரும் முக்கியமான 4 கண்டிஷன்களை முன்வைத்தார் .
ஜெயம் ரவி கண்டிஷன்கள்
1.இந்தப்படத்தில் நடிக்க நான் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க வேண்டும்
2.சிவகார்த்திகேயன் என்னை அடிப்பது மாதிரி காட்சிகள் இருக்கவே கூடாது.
3.கால்ஷூட் விசயத்தில் கட்டாயப்படுத்தக் கூடாது.
4.விளம்பரங்களில் சிவகார்த்திகேயனுக்குச் சமமாக எனக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை வைத்ததாக சொல்லப்படுகிறது.
இவற்றையெல்லாம் படக்குழு ஏற்றுக்கொண்டதால் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
படப்பிடிப்பை வெகு விரைவில் தொடங்க படக்குழு திட்டமிட்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த தீபாவளி அன்று ஜெயம் ரவி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிப்பில் தனித்தனியாக பிரதர் மற்றும் அமரன் திரைப்படம் வெளியானது.இப்போது இருவரும் ஒரே படத்தில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பாப்புடன் இருக்கின்றனர்.