விவாகரத்து செய்த ஜெயம் ரவியின் அப்பா 3 முறை திருமணம் செய்தவரா? அதிர வைக்கும் குடும்ப பின்னணி!

Author:
10 September 2024, 2:30 pm

ஜெயம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்து பிடித்திருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் கடந்த 2009ம் ஆண்டு பிரபல தயாரிப்பாளரான சுஜாதாவின் மகள் ஆர்த்தி என்பவரை ஜெயம் ரவி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Jayam Ravi Marriage

இவர்களுக்கு ஆரவ் , அயான் என இரண்டு பிள்ளைகள் இருக்கும் சமயத்தில் கடந்த சில நாட்களாக ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் வெளியாகிக்கொண்டு இருந்தன. ஆனால், இருவருமே இதை உறுதி செய்யாமல் மௌனம் காத்து வந்த நிலையில் நேற்று ஜெயம் ரவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

aarthi ravi

இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து சம்மந்தப்பட்ட செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் மனைவியை விவாகரத்து செய்துள்ள ஜெயம் ரவியின் தந்தை இதுவரை மூன்று திருமணம் செய்துள்ளனர் என ரகசிய தகவல் கசிந்துள்ளது.

jeyam ravi parents

ஆம்,அதாவது ஜெயம் ரவியின் அப்பாவான மோகன் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் அவரது மனைவி இந்து மதத்தை சேர்ந்தவர். இருவரின் மனமும் ஒன்று சேர்ந்ததை அடுத்து இருவரும் இந்து, கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் என மூன்று மதங்களின் படி மூன்று முறை திருமணம் செய்து கொண்டார்கள். இதன்படி ஜெயம் ரவியின் தந்தைக்கு மூன்று திருமணம் ஆகி இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!