இளமை துள்ளுது மனுஷனுக்கு…. மேடையிலே KISS அடிச்ச ஜெயம் ரவி – வீடியோ!

Author: Shree
5 May 2023, 7:03 pm

மனைவிக்கு மேடையிலே அன்பு முத்தம் கொடுத்த ஜெயம் ரவி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவரது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் இருவருக்குமே மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பிறகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயம் ரவி கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அருண்மொழிவர்மனாக நடித்திருந்தார். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தியுடன் பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டிகொடுத்துள்ள இந்த ஜோடி தங்கள் காதல் வாழ்க்கையில் நடந்த நிறைய ஸ்வாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

அப்போது யாரு பெஸ்ட் கிஸ்ஸர் என கேட்டதற்கு, ஜெயம் ரவி இரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை வரும் என கூறி “இருவருமே பெஸ்ட் கிஸ்ஸர் தான் என்பதை மறைமுகமாக கூறினார். உடனே மனைவிக்கு அன்பு முத்தம் கொடுத்து காதலால் ஆர்த்தியை மூழ்கடித்தார். உடனே ஆர்த்தியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. இந்த அழகான ஜோடி தற்போது அஜித் ஷாலினி, சூர்யா – ஜோதிகா, சினேகா -பிரசன்னாவுக்கு அடுத்த ஜெயம் ரவி ஆர்த்தி என பேமஸ் ஆகி வருகிறார்கள். இதோ அந்த ரொமான்டிக் வீடியோ:

https://www.facebook.com/watch/?v=753837303193628&ref=sharing

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?