ஜெயம் ரவிக்கு பெத்த கை மாமியார் கொடுத்த கிப்ட்.. மருமகனை தூக்கி விட கோடியை வாரி வழங்கும் ஆன்ட்டி..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவரது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் இருவருக்குமே மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பிறகு, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தந்தை எடிட்டர் மோகன் எடிட்டர் பணியையும் தாண்டி திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக மாறி தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் வரலட்சுமி என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் மோகன் ராஜா, ஜெயம் ரவி. இதில், மோகன் ராஜா இயக்குனராகவும் ஜெயம் ரவி முன்னணி நடிகராகவும் இருந்து வருகிறார். ஜெயம் ரவி ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சைரன். இந்த படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கி இருந்தார். சைரன் படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். சைரன் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்து இருந்தனர்.

இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்த இந்த படம் 30 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில், பாதியளவு மட்டுமே வசூலை பெற்றதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படத்தையும் சுஜாதாவே தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அடங்கமறு இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்க உள்ளதாகவும், சைரன் படத்தில் நடித்தற்காக மருமகனுக்கு விலை உயர்ந்த கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், இனிவரும் படங்கள் சூப்பர் ஹிட் படமாக மாமியாருக்கு லாபத்தை பெற்று தர வேண்டும் என ஜெயம் ரவி தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறாராம். இது தவிர காதலிக்க நேரமில்லை, ஜீனி, பிரதர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், கமல்ஹாசன் உடன் இணைந்து தக் லைஃப் படத்திலும் நடித்து வருவதால் அடுத்தடுத்த ஹிட்களை எதிர்பார்க்கலாம் என ஜெயம் ரவியின் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

Poorni

Recent Posts

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

50 minutes ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

1 hour ago

குட் பேட் அக்லி திரைப்படம் இப்படிப்பட்ட கதையம்சம் கொண்டதா? சந்தேகத்தை கிளப்பிய பிரபலம்..

வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

2 hours ago

2ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோருக்கு தனியார் பள்ளி மிரட்டல்.. TC வாங்க மிரட்டி ஒப்பந்தம்!

கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு… குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…

3 hours ago

நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…

இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…

3 hours ago

This website uses cookies.