ஒரு காலத்தில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வந்த நடிகர் ஜெயம் ரவி கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்து அடுத்தடுத்து சினிமாவில் மார்க்கெட் இழந்து வருகிறார் .
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் அவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பிரதர். இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்துக்கு போட்டியாக வெளிவந்து அடையாளமே தெரியாத அளவுக்கு வசூலில் மோசமாக பின்தங்கி விட்டது .
இதனால் ஜெயம் ரவிக்கு அடிக்கு மேல் அடி விழுந்து வருகிறது. கோமாளி திரைப்படம் தான் கடைசியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது. வரிசையாக பூமி, அகிலன், இறைவன், சைரன், பிரதர் எனத் தொடர் தோல்விகளை சந்தித்து மார்க்கெட் இழந்து விட்டார் ஜெயம் ரவி .
பிரதர் திரைப்படத்தின் மூலம் வெறும் ரூ. 4 கோடி ரூபாய் தான் ஷேர் கிடைத்திருப்பதாகவும் இது ஜெயம் ரவி நடித்த படங்களிலே மிக மோசமான நஷ்டத்தை சந்தித்த படமாக பார்க்கப்படுகிறது. தனி ஒருவன் படத்தின் போதே கிட்டத்தட்ட 25 கோடி ஷேர் கிடைத்தது.
அப்படி இருக்க தற்போது வெளிவந்த பிரதர் படத்திற்கு வெறும் 4 கோடி ஷேர் கிடைத்திருப்பது பெரும் தோல்வியாக பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் மனைவி, பிள்ளைகள் குடும்பங்களை பிரிந்து விட்ட ஜெயம் ரவி குடும்ப பாசத்தை காட்டுகிறேன் அக்கா பாசத்தை காட்டுகிறேன் என பிரதர் திரைப்படத்தில் நடித்தது யாருக்கும் கனெக்ட் ஆகவில்லை. ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் ஜெயம் ரவி எப்படி மீண்டும் மார்க்கெட் பிடிப்பார் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.