‘எனக்கு அவங்க மேல Crush’.. மூச்சுவிட்டா கூட கண்டுபிடிச்சுடுவேன்.. மனம் திறந்த ஜெயம் ரவி..!

Author: Vignesh
11 May 2023, 5:30 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவரது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் இருவருக்குமே மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பிறகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

Jayam ravi - Updatenews360

ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயம் ரவி கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அருண்மொழிவர்மனாக நடித்திருந்தார்.

ponniyin selvan -updatenews360

இந்நிலையில், ஒரு பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில், நதியா ஜெயம் ரவிக்கு சர்ப்ரைஸ் செய்ய போன் செய்த நேரம், ஹலோ என்று நடிகை நதியா பேசியதும், உடனே ஜெயம் ரவி, போனில் பேசியது நதியா என்று உடனே கண்டுபிடித்துவிட்டார்.

இனிடையில், உடனே நதியா, ரவி தான் உங்களுக்கு சர்பிரைஸ் பண்ணலாம்ன்னு பார்த்தா, இப்படி கண்டுபிடிச்சு விட்டீங்களே என்று சொல்ல, அதற்கு ஜெயம் ரவி, மூச்சுவிட்டா கூட நீங்க யாருன்னு நான் கண்டுபிடிச்சு விடுவேன் என்றும், ஏன்னா உங்க மேல எனக்கு அவ்வளவு லவ் இருக்கு எனவும், நீங்க எவ்வளவு பெரிய லெஜண்ட் என்று ரவி தெரிவிக்க, அதற்கு நதியா அப்படி இல்லை ரவி, நீங்க சிறந்த நடிகர் என்றும், உங்க கூட நடித்ததை தான் எப்போமே மறக்க மாட்டேன் என தெரிவித்தார்.

jayam ravi -updatenews360

மேலும், அப்போது ரவி பேசுகையில், பொன்னியின் செல்வம் படம் சூப்பர் ஹிட். ஏன்னா… நீங்க செட்டிற்கு வந்ததால்தான் சூப்பர் ஹிட்டடித்தது என்று தெரிவிக்க, அதற்கு நடிகை நதியா போனில் சிரித்துவிட்டார். தற்போது இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1364

    39

    13