உண்மையை உடைத்த பிரபல நடிகரின் தந்தை..! பிறப்பால் முஸ்லீம், குழந்தை இல்லாததால் தத்தெடுப்பு..!

Author: Vignesh
28 November 2022, 1:30 pm

மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்தது குறித்து ஜெயம் ரவியின் தந்தை அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. இவர் 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தான் நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

jayam ravi father - updatenews360

அதனை தொடர்ந்து இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, நிமிர்ந்து நில், தனிஒருவன் என்று பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருக்கிறது. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட படம்.

ஜெயம் ரவி திரைப்பயணம்:

jayam ravi father - updatenews360

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி இருந்தார்கள். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி அவர்கள் பொன்னியின் செல்வன் வேடத்தில் நடித்து அசதி இருந்தார்.

ஜெயம் ரவி நடித்த படங்கள்:

jayam ravi father - updatenews360

இதனை அடுத்து இறைவன், சைரன், அகிலன் போன்ற பல படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயம் ரவியின் தந்தை அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல்ஆகி வருகிறது. அதாவது, நடிகர் ஜெயம் ரவியின் தந்தை மோகன். இவர் சினிமாவில் முன்னணி படத்தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தவர். சமீபத்தில் தான் மோகன்- வரலட்சுமி தம்பதியின் ஐம்பதாவது திருமண நாள் நடந்தது. இதை அவருடைய மகன்களாக ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா இருவரும் கோலாகலமாக கொண்டாடி இருந்தார்கள்.

மோகன் அளித்த பேட்டி:

jayamravi - updatenews360 2

இது குறித்த புகைப்படம் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் இதுகுறித்து ஜெயம் ரவியின் தந்தை மோகன் தன்னுடைய மனைவி வரலட்சுமி உடன் சேர்ந்து பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் திருமணம் குறித்துக் கூறியிருந்தது, நான் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன். என்னுடைய மனைவி ஒரு பிராமண வீட்டுப் பெண். என்னுடைய உண்மையான பெயர் ஜின்னா. எங்களுடைய திருமணம் காதல் திருமணம். நான் சிறுவயதில் நடிகர் தங்கவேல் வீட்டில் தான் வளர்ந்தேன்.

திருமணம் குறித்து சொன்னது:

jayam ravi father - updatenews360

தங்கவேலுக்கு குழந்தைகள் இல்லாததன் காரணமாக அவர் என்னை குழந்தையாக தத்தெடுத்து வளர்த்தார். எனக்கு மோகன் என பெயர் வைத்ததும் அவர்தான். தங்கவேல் மூலம் தான் சினிமாவில் எடிட்டிங் வேலையை கற்றுக் கொண்டேன். மேலும், எனக்கும், என்னுடைய மனைவி வரலட்சுமிக்கும் மூன்று முறை திருமணம் நடைபெற்றது. நாங்கள் மதம் வீட்டு மதம் கல்யாணம் செய்து கொண்டதாக சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் நாங்கள் மனம் விட்டு தான் கல்யாணம் செய்து கொண்டோம் என்று கூறி இருந்தார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1162

    2

    0