நடிகர் ஜெயம் ரவி,15 வருடங்களுக்கு முன்பு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்,மேலும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் சமீபத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி பிரிவதாக அறிவித்தனர்.
இந்த முடிவு தனிப்பட்டதாக இருப்பதாகவும், அவரின் மனைவி ஆர்த்தி இந்த முடிவிற்கு உடன்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இதையும் படியுங்க: “என் ஆயுள் ரேகை நீயடி”..ஜி.வி பாடியதை ரசித்த சைந்தவி…உற்சாகத்தில் ரசிகர்கள்..!
ஜெயம் ரவி தன்னுடைய மனைவியால் மன உளைச்சலை சந்திக்க நேரிட்டதாகவும், தனக்கு செலவுக்கு கூட தனி வசதி இல்லை என்றும் தெரிவித்தார்.மாமியாரின் தலையீடு அதிகம் இருந்தது என்று குற்றம்சாட்டியுள்ளார். இது ரசிகர்களிடம் ஆர்த்தி மீது கோபத்தையும் சமூகவலைத்தளங்களில் விவாதங்களையும் உருவாக்கியது.
தற்போது சமீபத்தில் ஒரு தனியார் YouTube சேனலுக்கு பேட்டி அளித்த ஜெயம் ரவி, தனது தனிப்பட்ட விவகாரம் பற்றி கூறியுள்ளார்…அதில் “வதந்திகள் பரவத் தொடங்கியதால், நான் வெளியில் சொல்ல வேண்டிய நேரம் வந்தது.என் படங்களை ப்ரோமோட் செய்யும் போது இந்த விவகாரம் என் மீது தாக்கம் காணக்கூடாது என்பதற்காக, நேர்மையாக உண்மையை சொல்லிவிட்டேன்.”என்று அந்த பேட்டியில் கூறியிருப்பார்.