பாவம் மனுஷன்….. விவாகரத்து சர்ச்சைக்கு பின் மும்பைக்கு குடியேறிய ஜெயம் ரவி – வீடியோ!

Author:
30 September 2024, 1:59 pm

தென் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் தான் ஜெயம் ரவி. ஹேண்ட்ஸம் ஹீரோவாக பல பெண் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்தார். முதன் முதலில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய ஜெயம் ரவி தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்க வைத்து கொண்டு இருந்தார்.

jeyam ravi

ஜெயம் ரவிக்கென தனி மார்க்கெட்டும் தமிழ் சினிமாவில் உருவாக தொடங்கியது. குறிப்பாக இவர் அடுத்த அடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக முன்னணி நடிகராகவும் மார்க்கெட் பிடித்தார். ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன், உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக பார்க்கப்பட்டது.

இதனிடையே ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி தயாரிப்பாளரான சுஜாதாவின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் , அயான் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் டிக் டிக் டிக் திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து அவரது மூத்த மகன் ஆரவ்வும் நடித்திருப்பார்.

jeyam ravi

மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக அண்மையில் அறிவித்து பேரதிர்ச்சி கொடுத்தார். இது அவரது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஜெயம் ரவியின் விவாகரத்து அறிவிப்பை மனைவி ஆர்த்தி ஏற்றுக் கொள்ள முடியாமல் அதை தவிர்த்தார்.

மேலும், இந்த விவாகரத்து பற்றி எங்களுக்கு முன்னதாக தெரிவிக்கவே இல்லை இது அவரது தனிப்பட்ட முடிவு என ஆர்த்தி அறிவித்து பேரதிர்ச்சியை கொடுத்தார் அதன் பின்னர் ஜெயம் ரவி…. மனைவி ஆர்த்தி என்னை நிறைய கொடுமை செய்தார் என்றும் மாமியார் பண விஷயத்தில் ஏமாற்றினார் என கூறி அதிரவைத்தார் .

மேலும் என்னிடம் தனியாக ஒரு பேங்க் அக்கவுண்ட் கூட இல்லை நான் பணம் செலவு செய்தால் அதற்கு கேள்வி கேட்பார். ஆர்த்தி என்னை வீட்டு வேலைக்காரர்களை விட மிகவும் மோசமாக ஒரு நாயை போல் நடத்தியதாக ஜெயம்ரவி குற்றம் சாட்டியிருந்தார். இது அடுத்து ரசிகர்கள் பலரும் ஜெயம் ரவிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்தனர்.

jeyam ravi

இதையும் படியுங்கள்: பிளாட்பாரத்தில் இருந்த என்னை என் மனைவி தான்…. நடிகர் கொட்டாச்சி உருக்கம்!

இப்படியாக இந்த விவாகரத்து விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது ஜெயம்ரவி விவாகரத்து சர்ச்சைகளுக்கு பிறகு தனியாக மும்பைக்கு சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பாவம் மனுஷன் இவ்வளவு சோகமா ஆகிட்டாரே வாழ்க்கையில் இவ்வளவு துன்பமா? அவர் மீண்டு வர கடவுள் தான் ஆசீர்வதிக்க வேண்டும் என ஜெயம் ரவிக்கு பலரும் வருத்தத்துடன் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 301

    0

    0