கத்தி முனையில் இரத்த கரையோடு நயன்தாரா, ஜெயம் ரவி – ‘இறைவன்’ ரிலீஸ் தேதி!
Author: Shree7 June 2023, 9:35 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவரது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் இருவருக்குமே மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பிறகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்திருந்தார். அதையடுத்து தற்போது அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அஹமத்‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ‘இறைவன்’ படத்தில் நடிகை நயன்தாரா ஜெயம் ரவி நடிக்கிறார். இவர்கள் இருவரும் ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.

யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 23-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் நயன்தாரா ஜெயம் ரவிக்கு இடையில் இரத்த கரையோடு கத்தி உள்ளது. இதனால் ஆக்ஷ்ன் , murder சம்மந்தப்பட்ட கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்க முடிகிறது.