ஜீன்ஸ் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா…? பாகுபலியை விட இரண்டு மடங்கு ஜாஸ்தி!

Author:
8 August 2024, 10:55 am

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் பிரசாந்த். இவரது நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜீன்ஸ். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார்.

Jeans

இதில் லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் . இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்திருந்தது. கிட்டத்தட்ட இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருப்பார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் மிக முத்தான பாடல்களாக ரசிகர்களின் மனதை கவர்ந்தது. குறிப்பாக இந்த படம் பல வெளிநாடுகளில் சென்று படமாக்கப்பட்டதால் இந்த படத்தின் பாடல்கள் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பிரஷாந்த் ஜீன்ஸ் படத்தின் பட்ஜெட் குறித்து கேட்டதற்கு,

அந்த படத்தின் இன்றைய பட்ஜெட் ரூ. 450 கோடி என தோராயமாக கூறினார். பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படமே ரூ. 200 கோடியில் படமாக்கப்பட்ட நிலையில் ஜீன்ஸ் படம் அதைவிட டபுள் மடங்கு என்பது ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது. ஜீன்ஸ் திரைப்படம் உலகில் உள்ள 7 அதிசயங்களுக்கும் சென்று 15 நாடுகளில் பாடல் காட்சியை மட்டும் படமாக்கியது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 275

    0

    0