ஒரு நியாயம் வேண்டாமா…? வாய்ப்பு கொடுக்க வந்தவரை ஒரே அடியா ஓடவிட்ட ஜீவா!

Author:
1 August 2024, 1:47 pm

திரைப்படத் துறையை பொறுத்தவரை எவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டிருந்தாலும் கூட தொடர்ச்சியாக மார்க்கெட் இருந்தால் தான் அவர்களால் நட்சத்திர நடிகராக ஜொலித்து இருக்க முடியும். இதனிடையே வாய்ப்புகள் கிடைக்காமல் தொடர்ந்து ஒன்று இரண்டு படங்கள் பிளாப் ஆகிவிட்டார் அவரை வைத்து படம் எடுக்க யாரும் முன்வரமாட்டார்கள்.

அதன் பின்னர் அவர்களுக்கு மார்க்கெட் குறைந்து வெகுசில வருடத்திலேயே ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவார்கள். அப்படி வளர்ந்து வந்த வேகத்தில் நட்சத்திர நடிகர்களாக இருந்த பல பேர் இன்று ஆள் எங்கு இருக்கிறார்கள்? என்ற அட்ரஸ் கூட இல்லாமல் போனதுண்டு. அந்த வகையில் ஜீவா பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

jeeva-updatenews360

குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்தார் ராம் , கற்றது தமிழ், ராமேஸ்வரம், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கச்சேரி ஆரம்பம் ,பாஸ் என்கிற பாஸ்கரன், சிங்கம் புலி, கோ ,வந்தான் வென்றான்,ரௌத்திரம், நண்பன், நீ தானே என் பொன் வசந்தம் ,என்றென்றும் புன்னகை உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இதில் ஜீவா நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் “சிவா மனசுல சக்தி” இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க அப்பத்தின் இயக்குனர் ராஜேஷ் ஜீவாவை சந்தித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என கதையை கூறியிருக்கிறார்.

உடனே ஜீவாவும் சூப்பரா இருக்கு… ஐடியா நல்லா இருக்கு சார் என்று சொல்லிவிட்டு ரூ. 4 கோடி சம்பளம் கொடுங்க என கேட்டாராம். இதைக் கேட்ட உடனே எடுத்து எடுப்பிலேயே இயக்குனர் ராஜேஷ் ஓடிவிட்டாராம். மார்க்கெட்டே இல்லாத ஜீவாவுக்கு இவ்வளவு ஆசை கொஞ்சம் ஓவர் தான் என்கிறார்கள் கோலிவுட் சினிமா வட்டாரங்கள். வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிவியா அதைவிட்டுவிட்டு இப்படி வாய்விட்டு வாழ்க்கைல மண் அள்ளி போட்டுக்கிட்டியே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 143

    0

    0