வாயும் வயிறும் வேறன்னு டீல் பேசிய ஜெயம் ரவி.. ஆர்த்தியின் விவாகரத்து முடிவுக்கு இதுதான் காரணமாம்..!
Author: Vignesh27 June 2024, 11:06 am
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொள்வதுடன் சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து விட்டு பின் மனகஷ்டம் காரணமாக பிரிந்து விடும் ஜோடிகளே அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது ஜெயம் ரவி ஆரத்தி ஜோடியும் இணைந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த ஜோடியின் விவாகரத்து பேச்சு தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.
முன்னதாக ஜெயம் ரவியின் மனைவி அவருடன் எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்து விட்டார். அதாவது, புகைப்படத்தினை ஜெயம் ரவியுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியது பலரிடையே சந்தேகத்தை கிளப்பியது. ஜெயம் ரவி கடைசியாக நடித்த 4 படங்களான சைரன், அடங்கமறு, பூமி, வீராப்பு போன்ற படங்களை தயாரித்தவர் அவரது மாமியார்தான் அதாவது, ஆர்த்தியின் தாயார்.
இந்த படங்கள் அவ்வளவாக ஓடவில்லை என்றாலும், சைரன் மட்டும் தயாரிப்பாளர் தரப்பிற்கு சற்று லாபத்தை கொடுத்தது என்று கூறப்படுகிறது. தற்போது, காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். ஜெயம் ரவியை இயக்குனர் பாண்டியராஜ் அணுகி ஒரு படத்தினை இயக்குவதற்கு கதை கூறியுள்ளார்.
இப்படத்தினை ஜெயம் ரவியின் மாமியார் தயாரிப்பாக இருந்ததுடன் ஒரு கோடி ரூபாய் பாண்டியராஜ் முன்பணமும் பெற்றுக் கொண்டாராம். 52 கோடி பட்ஜெட்டில் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பதாக இருந்தது. மாமியார் என்று கூட பாராமல் தனது சம்பளம் 25 கோடி ரூபாய் ஜெயம்ரவி கேட்டுள்ளார். அதற்கு, சமீபத்தில் நீங்கள் நடித்த எந்த படமும் ஓடவில்லை.
அவ்வாறு, இருக்கையில் எப்படி 25 கோடி கொடுக்க முடியும் என்று வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், மேலும் ஜெயம் ரவியின் மாமியார் பாண்டியராஜிடம் பட்ஜெட்டை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு கேட்ட நிலையில், பாண்டியராஜன் வேறு ஹீரோவை பார்த்துக் கொள்வதாக விஜய் சேதுபதியிடம் சென்று விட்டாராம். நல்ல இயக்குனர் ஒருவரின் படத்தினை இப்படி மாமியாரிடம் சம்பளத்தை அதிகமாக கேட்டு வாய்ப்பைத் தவறிவிட்டதால் இவர்களின் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.