I LOVE YOU சார்ர்ர்… பெண் ரசிகைகளை ஓடிப்போய் கட்டிப்பிடித்த ஜெயம் ரவி – வைரலாகும் வீடியோ!

Author: Shree
25 April 2023, 2:50 pm

பிரபல எடிட்டர் மோகனின் இளைய மகன் ஜெயம் ரவி. இவர் சினிமாவில் அப்பாவின் உதவியுடன் அறிமுகமாகி குழந்தை நட்சத்திரம், ஹீரோ என படிப்படியாக வளர்ந்தார். ரவி மோகன் என பெயர் கொண்ட இவர் ஜெயம் படத்தில் நடித்து பிரபலமானதால் அந்த படத்தின் பெயரையே தனது அடையாளமாக ஜெயம் ரவி என வைத்துக்கொண்டார்.

அதை தொடர்ந்து எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் ஆகியவை அவருடைய வெற்றிகரமான படங்களில் ஒன்றாக அமைந்தது. அதன் பின்னர் பேராண்மை, தனி ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்தார்.

இதனிடையே ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலியான, ஆர்த்தி என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரண்டு மகன்களும் உள்ளனர்.ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் ‘டிக் டிக் டிக்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

ஜெயம் ரவி தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. இதற்கான ப்ரோமோஷனில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்திய பிரஸ் மீட் ஒன்றில் ஜெயம் ரவி இப்படி ஒரு நண்பர்கள் கூட்டத்தை பிரியப்போகிறேன் என கூறி எமோஷனலாக கண்ணீர் விட்டு அழுதார்.

உடனே சக நடிகர்களான விக்ரம், கார்த்தி, திரிஷா உள்ளிட்டோர் அவரை கட்டிப்பிடித்து நாங்க இருக்கிறோம் மச்சி அழாதே என ஆறுதல் கூறினார்கள். அதே போல் ஒரு ரசிகரை ஐ லவ் யூ சார் என கூறி கத்தினார். அதை கேட்டதும் நெகிழ்ச்சியான ஜெயம் ரவி மேடையில் இருந்து எகிறி குதித்து ஓடி போய் அந்த பெண்ணை கட்டியணைத்துக்கொண்டார். உடனே அங்கிருந்த மற்ற ரசிகர்களும் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறி நிகழ்ச்சியில் ஆழ்த்தினர். இந்த அழகான சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

  • I loved My fans Uncondtionally Says Ajith kumar UNCONDITIONAL LOVE… கார் பந்தயத்திற்கு இடையே பேசிய அஜித் : சிலாகித்த ரசிகர்கள்! (வீடியோ)
  • Views: - 558

    3

    2