தினமும் சண்டை…. ஆர்த்தி ரொம்ப மோசம் ஜெயம் ரவி நல்லவர் – மாமியாரே இப்படி சொல்லிட்டாங்களே!

Author:
13 September 2024, 11:52 am

கடந்த சில நாட்களாக நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தியின் விவாகரத்து விவகாரம் தான் கோலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜெயம் ரவி விவாகரத்தை அறிவித்த பிறகு அவரது மனைவி என் கவனத்திற்கு வராமலேயே ஜெயம் ரவி இந்த விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு விட்டார்.

jeyam-ravi

அவரின் இந்த தனிப்பட்ட முடிவால் நானும் என் குழந்தைகளும் தவிர்த்துக் கொண்டிருக்கிறோம். இது குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இல்லை முழுக்க முழுக்க அவருடைய தனிப்பட்ட முடிவு தான். நான் எத்தனையோ முறை அவருடன் பேசி விஷயத்தை நினைத்தேன்.

ஆனால், அவரோ எனக்கு பேசுவதற்கு கூட வாய்ப்பே கொடுக்கவில்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதனால் மேலும் கோலிவுட்டில் பெரும் பரபரப்பாக இந்த விஷயம் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜெயம் ரவியின் மாமியார் சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அந்த பேட்டியில் ஜெயம் ரவியின் மாமியார் ஆன சுஜாதா ரவி பேசி இருப்பதாவது… என்னுடைய மகள் ஆர்த்தி முதன்முதலில் நான் ஜெயம் ரவியை காதலிக்கிறேன் என்று என்கிட்ட சொன்னவுடனே எனக்கு பேரதிர்ச்சியா இருந்துச்சு. ஏன்னா அவங்க சினிமா சம்பந்தப்பட்ட குடும்பம் நாங்க அப்படி இல்ல எங்களோட லைஃப் ஸ்டைலே வேற. இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி கனெக்ட் ஆச்சு அப்படிங்கிறதே எனக்கு ஒரு பெரிய ஆச்சரியமா இருந்துச்சு .

jeyam ravi

ஒரு டிவி நிகழ்ச்சியில் தான் இவங்க ரெண்டு பேரும் சந்திச்ச போது இருவருக்கும் காதல் உருவாச்சு. திருமண வாழ்க்கையில் ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையே நிறைய சண்டை வரும். தினம் தினம் சண்டையா தான் போய்க்கொண்டிருக்கும். நிறைய வாக்குவாதங்கள் வரும். அந்த மாதிரியான சமயத்துல நான் என்னோட மகளுக்கு கூட சப்போர்ட் பண்ண மாட்டேன் .

மாப்பிள்ளை ரவிக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன். ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா ரவி கொஞ்சம் நிதானமானவரு… ஆர்த்தி அப்படி இல்ல… ரொம்ப டென்ஷன் ஆவாங்க! சின்ன சின்ன விஷயத்துக்கு கூட கோபப்படுவாங்க. அதனால நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணவே மாட்டேன் .

அந்த சமயத்துல ஆர்த்திக்கு இன்னும் கொஞ்சம் கோபம் வரும்…. நீ என்ன உன்னோட மாப்பிள்ளைக்கு ஆதரவு கொடுக்கிறாயா? அப்படின்னு என்னை அவ திட்டுவா. அதனால எனக்கும் ஆர்த்திக்கும் இடையே வாக்குவாதம் [பலமுறை நடந்து இருக்கு. எனக்கு என்னோட மாப்பிள்ளை ரவி என்றால் மிகவும் பிடிக்கும்.

இதையும் படியுங்கள்: விவாகரத்து உண்மையாம்.. ஜெயம் ரவி – ஆர்த்தி குறித்து பகீர் கிளப்பிய பிரபலம்..!

ஏனென்றால் முதல் முதலில் என்னுடைய வீட்டிற்கு ஒரு ஆண்மகன் கால் எடுத்து வைத்தது என்றால் அது ரவி தான். தற்போது அவர் மூலமாக எனக்கு இரண்டு பேரன்கள் கிடைத்து இருக்கிறார்கள் என சுஜாதா மிகுந்த மகிழ்ச்சியோடு பேசியிருந்தார்.

அவரின் நீ இந்த பேட்டி தற்போது இந்த சமயத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும், ஆர்த்தியின் முன்கோபம் மற்றும் சந்தேகத்தால் தான் விவாகரத்து நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் தற்போது ஜெயம் ரவியின் மாமியாரின் இந்த பேட்டி அதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

  • Pradeep Ranganathan meets Aamir Khan வாழ்க்கை ஒரு வட்டம்…திடீரென ஆமீர் கானை சந்தித்த பிரதீப் ரங்கநாதன்.!