தமிழ் சினிமாவின் ஹேண்ட்ஸம் ஹீரோவாக அறிமுகமான புதிதில் இருந்து தற்போது வரை வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம்ரவி. இவரது தந்தை எடிட்டர் மோகனாக இருந்து வந்தவர். இயக்குனராக அண்ணன் இருக்கிறார். இப்படி மிகப்பெரிய திரை பின்பலம் கொண்ட குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்த ஜெயம் ரவிக்கு வாய்ப்புகள் மிக சுலபமாக கிடைத்துவிட்டாலும் அதை மிக சரியாக தக்க வைத்துக்கொண்டார்.
இதனிடையே ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ததாக அறிவித்து பேரதிர்ச்சியை கொடுத்தார். இந்த விவாகரத்து விவகாரம் பெரும் பூதாகரத்தை கிளப்பியது. மேலும் ஜெயம்ரவி பிரபல பாடகியான கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் தகாத உறவில் இருப்பதாகவும் அவருடன் கோவாவில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக ரகசியமாக வாழ்ந்து வருவதாக அவரது மனைவி ஆதாரத்துடன் வெளியீட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
இதனிடையே ஜெயம் ரவி பிரதர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்…என்னைப் பற்றி தவறான வதந்திகளை பரப்புகிறார்கள். அந்தப் பெண்ணைப் பற்றி தப்பா பேசாதீங்க. அந்த பெண் அப்பா அம்மா இல்லாத பெண் நான் அவருடன் சேர்ந்து ஒரு ஹீலிங் சென்டர் ஆரம்பிப்பதாக இருந்தேன். அதற்காக நடத்தப்படும் சதி இது என்று கூறி அந்த பாடகி கெனிஷாவுக்கு சப்போர்ட் செய்திருந்தார்.
இதையும் படியுங்கள்:போதும் நிறுத்து… இனிமேல் பேசின செருப்பால அடிப்பேன் – VJ மணிமேகலைக்கு மகாபா எச்சரிக்கை!
இந்த நிலையில் ஜெயம் ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்… “உன் சைடுல பால்ட்ட வச்சோனே என்ன பார்த்து முறைக்கிற…. நான் ஃபுல் ஸ்பீடுல பேச வந்தா ஏன்டா ஓடி ஒளியுற? நாலு வால்ஸ் குள்ள மட்டும் ரூல்ஸ் பேசி நடிக்கிற…. நான் அதே ரூல்ஸ் ரோட்ல பேசினா….ஏண்டா வந்து குலைக்கிற? என்ற பாடல் வரிகளுடன் ஜெயம் ரவி ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வீடியோவை வெளியிட்டு இந்த சிறப்பான விழாவிற்காக நன்றி எனக் கூறி பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ மனைவி ஆர்த்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு லைக் கொடுத்து வருகிறார்கள்.