நட்சத்திரங்கள் கூடிய பிரம்மாண்ட Birthday பார்ட்டி…. மனைவிக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த ஜெயம் ரவி!

Author: Shree
18 April 2023, 8:15 pm

பிரபல எடிட்டர் மோகனின் இளைய மகன் ஜெயம் ரவி. இவர் சினிமாவில் அப்பாவின் உதவியுடன் அறிமுகமாகி குழந்தை நட்சத்திரம், ஹீரோ என படிப்படியாக வளர்ந்தார். ரவி மோகன் என பெயர் கொண்ட இவர் ஜெயம் படத்தில் நடித்து பிரபலமானதால் அந்த படத்தின் பெயரையே தனது அடையாளமாக ஜெயம் ரவி என வைத்துக்கொண்டார்.

அதை தொடர்ந்து எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் ஆகியவை அவருடைய வெற்றிகரமான படங்களில் ஒன்றாக அமைந்தது. அதன் பின்னர் பேராண்மை, தனி ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்தார்.

இதனிடையே ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலியான, ஆர்த்தி என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரண்டு மகன்களும் உள்ளனர்.ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் ‘டிக் டிக் டிக்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

மனைவி ஆர்த்தி ரவி எப்போதும் சமூகவலைத்தளங்களில் தனது மாடர்ன் லுக் புகைப்படங்களை வெளியிட்டு கவனம் ஈர்ப்பார். இந்நிலையில் சமீபத்தில் அவரது பிறந்தநாளை ஜெயம்ரவி நட்சத்திரங்களை ஒன்று சேர்த்து கோலாகலமாக இரவு பார்ட்டியாக கொண்டாடியுள்ளார்.

அந்த கொண்டாட்டத்தில் துல்கர் சல்மான் அவரது மனைவி, கீர்த்தி சுரேஷ், சாந்தனு அவரது மனைவி, பிருந்தா மாஸ்டர், குஷ்பு , வைபவ் மற்றும் அவரின் மனைவி என பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!