டாப் ஹீரோயின்களையே தோற்கடிக்கும் ஜெயம் ரவி மனைவி – மாடர்ன் கிளிக்ஸ்!

Author: Shree
19 November 2023, 2:13 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவரது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் இருவருக்குமே மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பிறகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தந்தை எடிட்டர் மோகன் எடிட்டர் பணியையும் தாண்டி திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக மாறி தெலுங்கு , தமிழ் , கன்னடம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் வரலட்சுமி என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் மோகன் ராஜா, ஜெயம் ரவி.

இதில் மோகன் ராஜா இயக்குனராகவும் ஜெயம் ரவி முன்னணி நடிகராகவும் இருந்து வருகிறார். ஜெயம் ரவி ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ரவி சில நாட்களாகவே தொடர்ந்து மாடர்ன் , கவர்ச்சி உடைகளை அணிந்து டாப் ஹீரோயின்களுக்கே செம டஃப் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது டாப் ஹீரோயின்களுக்கே செம டஃப் கொடுக்கும் வகையில் ஜெயம் ரவி மனைவி மாடர்ன் லுக்கில் மிகவும் அழகாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். அவரின் மனைவி அழகை பார்த்து இவங்களே படங்களில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கலாம் போல என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • Vijay Antony live concert cancellation ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய் ஆண்டனி…வெளிவந்த அறிக்கையால் பரபரப்பு..!
  • Views: - 300

    0

    0