கட்டின தாலி அறுத்து போட்டுட்டாங்க … ஜெயம் ரவி அப்பா- அம்மாவின் True Love ஸ்டோரி!

Author: Shree
18 April 2023, 1:45 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவரது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் இருவருக்குமே மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பிறகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தந்தை எடிட்டர் மோகன் எடிட்டர் பணியையும் தாண்டி திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக மாறி தெலுங்கு , தமிழ் , கன்னடம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் வரலட்சுமி என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் மோகன் ராஜா, ஜெயம் ரவி.

இதில் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவியின் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நமக்கு தெரியும். ஆனால், அவரது அப்பா மோகனின் திருமண வாழ்க்கை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், தற்போது அவர் பேட்டி ஒன்றில் தன் மனைவி வரலக்ஷ்மியுடன் தன் காதல் பயணத்தை குறித்து பேசிய வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில், நான் யாருக்கும் சொல்லாமல் கோவில் வச்சி இவங்களுக்கு தாலி கட்டிட்டேன். பின்னர் என் அம்மா என்னிடம் சண்டை போட்டு முறையாக திருமணம் செய்துக்கொள்ள சொல்லி நான் கட்டின தாலியை அறுத்துபோட்டுட்டாங்க. பின்னர் குடும்பத்தினர் , உறவுக்காரர்கள் முன்னிலையில் மீண்டும் ஒரு முறை தாலி கட்டி திருமணம் செய்துக்கொண்டோம். ஆனால், இந்த சம்பவத்திற்கெல்லாம் என் மனைவி வருத்தப்படவில்லை. காரணம் எப்படியோ நான் அவளுக்கு கிடைத்துவிட்டேன் என்பதிலே அவள் ரொம்ப சந்தோஷப்பட்டாள் என அற்புதமான காதல் பயணத்தை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இந்த அன்பான ஜோடி இன்னும் 100 ஆண்டுகள் சந்தோஷமாக வாழவேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். இதோ அந்த வீடியோ:

https://youtube.com/shorts/FGXvSjEGigs?feature=share
  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…