ஜீவாவுடன் நடிக்கிற சான்ஸ்-ஆ மிஸ் பண்ண SK..விஜய் டிவி தான் காரணமா.!
Author: Selvan20 February 2025, 6:08 pm
‘என்றென்றும் புன்னகை’ பட வாய்ப்பை தவறவிட்ட SK
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ஆரம்ப காலத்தில் காமெடி கலந்த படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து,தற்போது மாஸ் ஹீரோவாக உருவெடுத்து,தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார்.
இதையும் படியுங்க: தியேட்டரில் திணறுகிறதா ‘விடாமுயற்சி’ …கேள்விக்குறியாகும் லைக்கா நிறுவனம்.!
இந்த நிலையில் இவர் ஒரு நல்ல காமெடி படத்தை மிஸ் செய்ததாக நடிகர் ஜீவா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.அதாவது ஜீவா,வினய்,சந்தானம் நடிப்பில் வெளிவந்த என்றென்றும் புன்னகை திரைப்படம் பக்கா காமெடியாக உருவாகி ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தில் முதலில் வினய்க்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயனை படக்குழு அணுகியுள்ளது.ஆனால் சிவகார்த்திகேயன் ஏற்கனவே சந்தானம் நடிக்கிறார்,நானும் நடித்தால் விஜய் டிவி குடும்பமாக மாறிவிடும் என நகைச்சுவையாக சொல்லிவிட்டு அப்படத்தில் இருந்து விலகியுள்ளார்.அதன் பிறகே படக்குழு லோக்கல் பையன் மாதிரி இல்லாமல் பெங்களூரு பையனாக வினயை நடிக்க வைத்தோம் என அந்த பேட்டியில் ஜீவா பகிர்ந்திருப்பார்.