அடக்கொடுமையே.. லியோ படத்துக்கு காச வாங்கிட்டு ஜில்லா படத்தை போட்ட பிரபல திரையரங்கம்!!

Author: Vignesh
19 October 2023, 6:18 pm

இன்று உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.

சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பிரியா தியேட்டரில் லியோ படம் திரையிடப்பட்டது. அப்போது, லியோ படத்தின் ஆடியோ சரியாக கேட்காத காரணத்தால் ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகிகளிடம் சண்டை போட ஆரம்பித்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திரையரங்க நிர்வாகிகள் லியோ படத்திற்கு பதிலாக ஜில்லா படத்தை போட்டு காட்டியிருக்கிறார்கள். இதனால் கடுப்பான ரசிகர்கள் லியோ படத்தை போடுமாறு எழுந்து நின்று தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி உள்ளதாக ரசிகர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

leo-updatenews360
  • Actor Bala Saravanan Share About Perusu Movie படத்தோட பேரு தெரியாம நடிச்சேன்.. ‘பெருசு’ பொருத்தமான தலைப்பு.. ரசிகர்களுடன் படம் பார்த்த நடிகர் பேட்டி!