90 கிட்ஸ் பேவரைட் கிரஷ் ஜெ.ஜெ பட நடிகையா இது….? ஆன்டி Look’ல் அடையாளமே தெரியல!

Author: Shree
6 June 2023, 9:35 am

ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்து காலங்கள் கடந்தும் மனதில் நீங்காத நடிகையாக இருப்பவர்கள் ஒரு சிலர் உண்டு. அந்த வகையில், மாதவன் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான ஜெ.ஜெ. திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை பிரியங்கா கோதாரி.

மிகவும் பவ்யமாக, வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அழகால் அத்தனை பேரையும் கட்டிப்போட்ட இவர் பாலிவுட் , தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தார். நன்றாக சென்றுக்கொண்டிருந்த இவரது திரைப்பயணத்தை அவரே கெடுத்துக்கொண்டார். ஆம் பணத்திற்கு ஆசைப்பட்டு ராம் கோபால் வர்மா படங்களில் அடிக்கடி நடித்து மார்க்கெட் இழந்துவிட்டார்.

இவர் பாஸ்கர் பிரகாஷ் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன் பின்னர் அரசியலும் கொஞ்சம் தலைகாட்டினார். இந்நிலையில் பல வருடங்களுக்கு பின்னர் இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக அதை பார்த்து ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துவிட்டார்கள். படு குண்டாகி ஆள் அடையாளமே தெரியாமல் ஆன்டி போல் ஆகியிருப்பதை பார்த்து எல்லோரும் அவரா இவர்?என ஷாக் ஆகிவிட்டனர்.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?