அட பப்ளிசிட்டி பைத்தியமே இதெல்லாம் ஒரு பொழப்பா?.. ஆடை அணியாமல் ஆஸ்கர் மேடைக்கு வந்த நடிகர்..!

Author: Vignesh
11 March 2024, 2:03 pm

லாஸ் ஏஞ்சல்ஸில் 96 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் Oppenheimer, Poor Things திரைப்படங்கள் அதிக ஆஸ்கார் விருதுகளை வென்று குவித்தது. Robert Downey Jr., Christopher Nolan, Cillian Murphy போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் தங்களுடைய முதல் ஆஸ்கார் விருதினை கைப்பற்றினார்கள். இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

john-cena

இந்நிலையில், ஆடை வடிவமைப்பதற்கான விருதை வழங்க நடிகர் ஜான்சீனா வந்திருந்தார். அப்போது, ஆடை அணியாமல் மேடைக்கு வந்த ஜான்சீனா அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். ஜான்சீனாவின் இந்த செயலை பார்த்தவுடன் அரங்கில் இருந்த நடிகர், நடிகைகள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

நகைச்சுவைக்காக இதை செய்திருந்தாலும், இந்த விஷயம் தற்போது படு வைரலான நிலையில், அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் கேட்க முடியாத அளவுக்கு வார்த்தைகளால் திட்டி வருகின்றனர். இதன் மூலம் ஜான்சீனா ஆஸ்கார் மேடையை கலங்கப்படுத்தியதாகவும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

john-cena

மிகவும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், ஜான் சீனா ஸ்கின் கலர் உடை அணிந்துதான் மேடை ஏறினார் என்ற விளக்கமும் வெளியாகி உள்ளது. ஆனால் வித்தியாசமாக செய்கிறேன் என்ற பெயரில் இப்படி ஒரு கேவலத்தை அரங்கேற்றி இருக்கும் நடிகரை ரசிகர்கள் கிழித்து தொங்கவிட்டுள்ளனர். ஆஸ்கார் விருது விழா சோசியல் மீடியாவில் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!