அனிருத்தை ரகசியமாக காதலிக்கும் ஜோனிதா..? உண்மையை உடைத்த ஜோனிதாவின் உதவியாளர்..!
Author: Rajesh19 February 2023, 10:00 am
தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஒரே இசையமைப்பாளர் அனிருத். ரஜினி நடிப்பில் உருவாகும் ஜெயிலர், விஜய் நடிப்பில் உருவாகும் லியோ, கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 என பிரபலங்களின் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக புக் ஆகியுள்ளார்.
தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படம் முதலே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார். தற்போது தென்னிந்திய திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ள அனிருத், காதல் லீலை மன்னனாக கருதப்படுகிறார். பக்கா பிளேபாய் என விமர்சிக்கப்பட்டு இவரது சில நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி அவதிப்பட்டவர்.
ஆண்ட்ரியா, பிரபல விஜே திவ்யதர்ஷினி, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் என இவர் அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் தீயாய் பரவியது. அந்தவகையில், அனிருத் இசையில் தொடர்ந்து பல பாடல்களை பாடி வரும் பாடகி ஜோனிதா காந்தியை காதலிப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இதுகுறித்து இருவரும் மவுனம் காத்து வருகின்றனர்.
இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து அனிருத்தை, ஜோனிதா காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் கசிந்தது. சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அனிருத்துடன் காதலா என்று ஜோனிதாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜோனிதா காந்தி, அனிருத் இசை எனக்கு பிடிக்கும் என்று கூறியிருந்தார். மேலும் இதற்கு அவரது உதவியாளர், “இப்படி அவர் எங்கும் சொன்னதில்லை” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.