எனக்கு வேற வழி தெரியல ஆத்தா… ரசிகர்களை தாஜா செய்யும் வேலையில் இறங்கிய சூர்யா..!

Author: Vignesh
26 July 2024, 12:09 pm

செலக்ட்டீவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யா தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். கற்பனை கதைக்கொண்ட வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இத்திரைப்படத்தில் திஷா பட்டாணி, யோகி பாபு, நடராஜன், ரெடின், கோவை சரளா, ரவிக்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.

முன்னதாக தன்னுடைய திரைப்படத்தை எப்படியாவது வெற்றி திரைப்படமாக மாற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் சூர்யா, தன்னை ஒரு பான் இந்தியா நடிகராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மும்பையில் கூட செட்டிலானார்.

மேலும் படிக்க: அந்தமாதிரி ரிலேஷன்ஷிப்ல.. நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த வாணி போஜன்..!

ஆனால், அனைத்து படங்களுமே டிராப் ஆகி சூர்யாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. தற்போது, கங்குவா திரைப்படத்தை நம்பி இருக்கும் சூர்யா குறித்து வலைப்பேச்சு பிஸ்மி தனது பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதாவது, சமீப காலமாக ரசிகர்களை தாஜா செய்யும் வேலைகளை சூர்யா செய்து வருவதாகவும், அதிகமாக ரசிகர்களுடன் மிங்கில் ஆகி சமீபத்தில் ரத்ததானம் செய்வதற்காக ரசிகர்களுடன் சென்றிருந்தார். அதையடுத்து, ரசிகர் மன்ற நிர்வாகியின் தந்தை உயிரிழப்பிற்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினார்.

இவ்வாறு பல விஷயங்களை கூறிக் கொண்டே போகலாம். எது எப்படியோ கங்குவா படம் சூர்யாவுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் சூர்யா இருக்கிறார். அதை ரசிகர்கள் காப்பாற்றுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பத்திரிக்கையாளர் பிஸ்மி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!