ஐஸ்வர்யாவை ஒதுக்கி வைக்க இது தான் காரணம்.. கதிகலங்கி நின்ற ரஜினி குடும்பம்..!
Author: Vignesh16 December 2023, 10:15 am
கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து சிறப்பு தோற்றத்தில் நடித்துவரும் லால்சலாம் படத்தினை இயக்கி வரும் நிலையில், ஐஸ்வர்யா தனுசை பிரிந்து ஒரு வருடமான நிலையில், அவரவர் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு youtube சேனலுக்கு பேட்டி அளிக்க தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவுக்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். ஒருமுறை தனுஷ் பெற்றோர்கள் போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினி வீட்டிற்கு சென்றிருந்தனர். அப்போது, தனுஷின் தாய் தந்தை இருவரும் அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தனுஷுக்கு தெரிய வந்ததும் ஏற்கனவே குடும்பத்தினர் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்த தனுஷ் ஒரு இடத்தில் அப்பாவோ அம்மாவோ கண்ணியமாக நடத்தப்படவில்லை என்று உணர்ந்ததை அடுத்து, இந்த விஷயம் கேள்விப்பட்டு இதுகுறித்து ஐஸ்வர்யாவிடம் கோபமாக நடந்து கொண்டாராம். பெற்றோர்களுக்கு அவமானம் ஏற்பட்டதில் ஆவேசப்பட்ட தனுஷ் 150 கோடி செலவில் போயஸ் கார்டனில் வீட்டை கட்டி பழி தீர்க்க யாரையும் கூப்பிடாமல் கிரகப்பிரவேசம் நடத்தியதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.