குழந்தை பெத்துக்க முடியுமா? முடியாதா.. நெப்போலியன் மகனை வரம்பு மீறி விமர்சித்த பிரபலம்..!
Author: Vignesh23 July 2024, 10:50 am
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு அரியவகை நோயால் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்காவில் நெப்போலியன் சென்று வந்த நிலையில், தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
இதனிடையே, தனுசுக்கு திருமணம் குறித்து வெளியானதில் இருந்து பலவிதமான விமர்சனங்களும் சோசியல் மீடியாவில் எழுந்து வருகிறது. இந்நிலையில், சினிமா விமர்சகரான செய்யாறு பாலு திருமணம் குறித்து இப்படியா விமர்சனம் செய்வது என்று பேட்டி ஒன்றில் கேட்டுள்ளார். அதாவது, தற்போது தனுசுக்கு 25 வயதாகும் நிலையில் அவருக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்ட நெப்போலியன் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணிற்கும் தனுஷ்கும் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளார்.
தனுஷ் இந்தியா வர முடியாததால் அவர்களின் திருமணம் வீடியோ காலில் நடைபெற்றது. தற்போது, சோசியல் மீடியாவில் தனுசுக்கு திருமணம் செய்வது தவறு என்றும், அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. பணத்திற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி வீணாக்கலாமா என்ற பேச்சும் இணையதளத்தில் பரவ தொடங்கின. குறிப்பாக, டாக்டர் காந்தராஜ் இந்த நோய் உள்ளவர் 12 அல்லது 18 வயதிலேயே இறந்து விடுவார்கள். இவர் 25 வயது வரை இருப்பதே பெரிய சாதனை என்று பேசியிருந்தார்.
இது குறித்து பல பத்திரிக்கையாளர்கள் பலவிதமான கருத்துக்களையும் அவதூறாக பேசி வரும் நிலையில், தமிழா தமிழா பாண்டியன் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தினை தற்போது பகிர்ந்துள்ளார். அதில், நெப்போலியன் மகனுக்கு வீடியோ கான்பரன்ஸில் நிச்சயம் நடந்து முடிந்தது. தனுஷின் திருமணம் அமெரிக்காவில் நடந்தால் சட்டப்படி செல்லாது என்றும், அவர்கள் திருமணத்தை ஜப்பானில் நடத்துகிறார்கள். நெப்போலியன் மகனுக்கு அனுசியா மனைவியாக இருக்க முடியாது. ஒரு செவிலியராகத்தான் இருப்பார் அந்தப் பெண் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த மாதிரியான பேச்சுக்கு பலத்த கண்டனங்களை பலரும் கூறி வருகிறார்கள்.