2 பேருக்கும் ரகசிய உறவு இருக்கு?.. தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு குறித்து இஷ்டத்துக்கு பேசும் பிரபலம்..!
Author: Vignesh12 April 2024, 10:40 am
கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.
மேலும் படிக்க: Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய பிரிவை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இவர்களுடைய பிரிவிக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், சமரசம் செய்து வைக்க ரஜினிகாந்த் முயற்சித்து பின்னர் அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்பட்டது.
மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!
எனினும் இருவரும் தங்களது பிள்ளைகளின் முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொண்டு வந்தனர். பள்ளி நிகழ்வுகளுக்கு இருவரும் சென்று புகைப்படங்களுடன் வெளியானது. தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேர முடிவெடுத்து இருப்பதாக திரைப்பட விமர்சகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், மகள் மருமகனை மீண்டும் ஒன்று சேர்க்க ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் முயற்சி செய்து, தற்போது மகன்களுக்காக மீண்டும் ஒன்று சேர முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் விவகாரத்து கோரிய மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
மேலும் படிக்க: என்ன இப்படி இறங்கிட்டாங்க.. எதுவுமே இல்லாமல் போட்டோ வெளியிட்ட சமந்தா..!
இந்நிலையில், இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். ஐஸ்வர்யா உதவி இயக்குனருடன் பழகி வருவதாக தனுஷ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. அதற்கு ஐஸ்வர்யா தரப்பு தனுஷ் மட்டும் என்ன யோக்கியமா ? அவர் அன்றே பெரிய நடிகர் மகளுடன் நெருக்கமாக இருந்தவர் தானே என்று சொல்கிறார்கள். இன்னும் ஆறு மாதங்களில் விவாகரத்து கிடைத்துவிட்டால் தனுஷுக்கு தனது உறவினால் வட்டாரத்திலிருந்து ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டுமென கஸ்தூரிராஜா முடிவு எடுத்திருப்பதாகவும், மேலும் ஐஸ்வர்யாவுக்கு அந்த உதவி இயக்குனருடன் திருமணம் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், பிரபல பத்திரிக்கையாளர் சந்தோஷ் ஜோசப் சொல்லியதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.