அப்போ ரூமர் உண்மை தானா?.. அரசியல் பிரமுகரின் மகனால் கர்ப்பமான ஆண்ட்ரியா..!
Author: Vignesh10 August 2024, 9:34 am
தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா படங்களில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.
தொடர்ந்து தமிழில் சில வெற்றிப்படங்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் பாட்டு பாடி உள்ளார். அத்துடன் வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் மூலம் அவருக்கு மார்க்கெட்டும் உயர்ந்தது. இன்றளவும் சரிவை சந்திக்காமல் அப்படியே ஹிட் ஹீரோயின் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார் ஆண்ட்ரியா.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சினிமா பத்திரிக்கையாளர் சுபைர் ஆண்ட்ரியா குறித்து பேசி உள்ளார். அதில், அவர் ஆரம்பத்தில் ஆண்ட்ரியாவுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை, விருப்பமில்லாமல் தான் நடிக்க வந்தார். ஆண்ட்ரியா ப்ரோக்கன் என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதில், அரசியல் பிரமுகரின் மகனால் கர்ப்பமானேன் என்றும், அவர் காதலித்து ஏமாற்றிவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், ஆண்ட்ரியா அனிருத்துடன் ரிலேஷன்ஷிப்பில் அவர்கள் நெருக்கமாக இருக்கும்போது புகைப்படங்களை சுச்சி லீக்சில் வந்தது என ஆன்ட்ரியா அதில் தெரிவித்துள்ளார்.