இங்கிலிஷ்…. இங்கிலிஷ்… IIFA விருது விழாவில் தமிழில் பேசிய வரலக்ஷ்மி – அசிங்கப்படுத்திய பத்திரிகையாளர்!

Author:
3 October 2024, 1:37 pm

IIFA Utsavam விருதுகள் விழா அபு தாபியில் உள்ள Yas தீவில் நேற்று தென்னிந்திய சினிமா பிரபலங்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடந்தது. 2023ம் ஆண்டில் வெளியான சிறந்த படங்களையும் அதன் கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் செப்டம்பர் 27 இந்த விருது வழங்கும் விழாவை நடத்தினார்கள்.

இந்த IIFA Utsavam விருது விழாவில் கலந்து கொண்டு தமிழில் பேசிய நடிகை வரலட்சுமியிடம் பத்திரிகையாளர்கள் இங்கிலீஷ்… இங்கிலீஷ் எனக்கூறி தமிழில் பேச வேண்டாம் என மறுத்தனர்கள் .

iifa award

பின்னர் வரலட்சுமி இங்கிலீஷில் பேச ஆரம்பித்தார். இதேபோல் நட்சத்திர நடிகர்களான கிகி விஜய் , சாந்தனு நாசர், நடிகை ராதிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் பேச முன்வரும்போதும் அவர்களையும் தமிழில் பேச வேண்டாம் என தடுத்து நிறுத்தி இங்கிலீஷில் பேச கூறினார்கள்.

இதையும் படியுங்கள்:அடடே… இவரை நம்ம எதிர்பார்க்கலயே…. “தளபதி 69″ல் நட்சத்திர பிரபலம் – யார் தெரியுமா?

iifa award vikram

இந்த வீடியோ இணையத்தில் வெளியாக தமிழ் படங்களுக்கு விருது கொடுக்கும்போது தமிழ் நடிகர்களை தமிழில் பேச வேண்டாம் என ஏன் சொல்கிறீர்கள்? அப்படி இருக்கும்போது ஏன் தென்னிந்திய பட பிரபலங்களை விருது விழாவிற்கு அழைக்கிறீர்கள்? என நெட்டிசன்ஸ் எல்லோரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?