நீ ஆம்பளையா இல்லையா? பிக் பாஸ் போட்டியாளரின் ஆண்மையை கொச்சைப்படுத்திய ஜோவிகா..!
Author: Vignesh7 November 2023, 11:57 am
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி மக்களிடையே நன்கு பரீட்சியமாகிவிட்டார். இவர் ‘அருவி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
அப்படத்தை தொடர்ந்து ‘வாழ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேறு எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை. இதனிடையே பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார்.
அந்நிகழ்ச்சியில், ஆரம்பம் முதலே மக்களிடத்தில் நல்ல அபிப்ராயத்தை பெற்ற பிரதீப் எதிர்பாராத விதமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதால், கோபமடைந்த அவரது ரசிகர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொகுப்பாளர் கமல் ஹாசன் மற்றும் இணை போட்டியாளர்களைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டது குறித்து பலர் தங்களது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகாவின் நடவடிக்கைகள் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறது. யாருக்கும் மரியாதை கொடுக்காதது கத்தி பேசுவது என்று அவர் சில விமர்சனங்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தினேஷை ஜோவிகா அவர் ஆம்பளையா இல்லையா என்று கொச்சைப்படுத்தி பேசி உள்ளது தற்போது இணையதளத்தில் பேசி பொருளாக உள்ளது.