உனக்கு அடுத்தவ புருஷன் கேட்குதா?… பிக்பாஸ் ஜுலியை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்..!

Author: Vignesh
13 April 2023, 10:45 am

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது

அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.

vijay tv serial-updatenews360

ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி.

சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தான் கூறுவார்கள். ஆனால் இப்போது அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

thendral vanthu ennai thodum-updatenews360

தற்போது நடித்துவரும் சீரியல் ஒன்றில் பிக்பாஸ் ஜுலி அடுத்தவரின் கணவரை தட்டிப் பறிக்க மோசமாக திட்டம் தீட்டியுள்ளது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, ஜுலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று வீரத்தமிழச்சி என்று பெயர்பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1ல் கலந்து கொண்டு ரசிகர்களின் வெறுப்பினை பெற்றுவந்த ஜுலி தற்போது மக்களுக்கு பிடித்த பிரபலமாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

thendral vanthu ennai thodum-updatenews360

ஆனால் பிக்பாஸ் வீட்டில் ஜுலியின் உண்மையான குணத்தை அறிந்த மக்கள் அவரை வெறுத்து ஒதுக்கினர். பின்பு சமூகவலைத்தள பக்கம் வராத ஜுலி பின்பு சில நிகழ்ச்சியில் பங்கேற்று ரீ எண்ட்ரி கொடுத்தார்.

thendral vanthu ennai thodum-updatenews360

தற்போது படவாய்ப்புக்காக காத்திருக்கும் ஜுலி விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருவதுடன், தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் வழக்கறிஞராக நடித்து வரும் ஜுலி இதில் அடுத்தவரின் கணவர் மீது ஆசை கொண்டு, அவரை தட்டிப்பறிக்க பல கிரிமினல் வேலைகளை செய்து வருவதால், சீரியல் வாசிகள் ஜுலியை கண்டபடி திட்டி வருகின்றனர்.

thendral vanthu ennai thodum-updatenews360
  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி