போலீசாரால் என் வாழ்க்கையை போச்சு…நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் நடந்த குளறுபடி…இளைஞன் பரபரப்பு பேட்டி..!
Author: Selvan27 January 2025, 8:46 pm
போலீசாரின் தவறான கைதால் வாழ்க்கையை தொலைத்த ஆகாஷ்
பிரபல பாலிவுட் நடிகரான சைஃப் அலிகான் அவருடைய வீட்டில் கடந்த 16ஆம் தேதி மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார்.இந்த நிகழ்வு காட்டு தீ போல் பரவி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியாக்கியது.
இதையும் படியுங்க: பட பட்ஜெட் 6 கோடி..ஆனால் வசூல் 50 கோடி…தியேட்டரில் மாஸ் காட்டும் மலையாள படம்…!
மும்பை நகரில் முக்கியமான பகுதிகளில் அதுவும் பலத்த பாதுகாப்பான சினிமா நடிகரின் வீட்டில் இந்த சம்பவம் நடந்ததால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.முதல்கட்டமாக வீட்டினுள் இருக்கக்கூடிய சிசிடிவி கேமராவை ஆராயும் போது அதில் ஒரு மர்ம நபரின் புகைப்படம் பதிவாகி இருப்பதை கண்டு பிடித்தனர்,உடனே அந்த போட்டோவை மும்பை மாநகர் போலீஸ் ஸ்டேஷன் முழுவதும் அனுப்பி தீவிர வேட்டையில் இறங்கினார்கள்.
அதன் அடிப்படையில் 18ஆம் தேதி ஆகாஷ் என்ற இளைஞரை கைது செய்து விசாரித்தனர்.அதன் பின்பு வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுலை குற்றவாளி என உறுதி செய்து,ஆகாஷை தவறாக கைது செய்து விட்டோம் என விடுவித்தனர்.ஆனால் தற்போது ஆகாஷ் இந்த கைது நடவடிக்கையால் என்னுடைய வாழ்க்கையை போய்விட்டதாக கூறியுள்ளார்.ஊடகங்களில் என்னுடைய புகைப்படத்தை போலீசார் பகிர்ந்ததால் என் குடும்பத்தினர் மிகவும் சிரமம் அடைந்தனர்,மேலும் நான் பார்த்த வந்த வேலையில் இருந்தும் என்னை நீக்கி வீட்டார்கள் என கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அன்றைக்கு நான் என்னுடைய திருமணத்திற்காக பெண் பார்க்க சென்று கொண்டிருந்தேன்,ஆனால் என்னை கைது செய்ததால் பெண் வீட்டார் என்னை வேண்டாம் என கூறிவிட்டனர்,இதனால் நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.சிசிடிவி கேமராவில் உள்ள நபருக்கு மீசை இல்லை,எனக்கு மீசை உள்ளது இது கூடவா போலிஸுக்கு தெரியாது என கேள்வி கேட்டுள்ளார்.இதனால் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டின் முன்பு எனக்கு நீதி கேட்க போகிறேன் என பேட்டி அளித்துள்ளார்.