அவர் கூட நடிக்கும் போது ஓவர் ஆக்டிங் பண்ணேன்.. ஆனா அஜித் கூட.. ஜோதிகா ஓபன் டாக்..! (வீடியோ)

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.

அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்தி அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

இதனிடையே ஜோதிகா அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஜோதிகா விஜயுடன் நடித்த குஷி படத்தின் அனுபவம் குறித்து பேசி உள்ளார்.

ஜோதிகா அளித்த பேட்டியில் கூறியதாவது, “குஷி படத்தின் கதை பற்றி இயக்குநர் கூறியபோது அந்த காலத்து ஹீரோக்கள் போல கொஞ்சம் அதிகமாகவே நடிக்க வேண்டும் என்றும், ஈகோ கொண்ட அனைவருமே கோபமாக மற்றவர்களை பார்த்து லுக் விடுவார்கள் என்றும், ஆனால் குஷியில் வேண்டுமென்றே அது கொஞ்சம் ஓவராக இருக்க வேண்டும் என நினைத்ததாக” ஜோதிகா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, ஜோதிகா பேசியதில், “இதுகுறித்து பலர் தன்னிடம் கூறி இருக்கிறார்கள் எனவும், அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ததாகவே நினைப்பதாகவும், முகவரி போன்ற மற்ற படங்களில் அப்படி நடிக்கவில்லை என்றும், தமிழ் தனக்கு அந்த அளவிற்கு தெரியாததால் அதை பேலன்ஸ் செய்வதற்கு என்பதால் சில சமயங்களில் தான் ஓவர் ஆக்டிங் செய்து நடித்தது உண்மைதான் என்று தெரிவித்தார்.

மேலும், ஒரு நடிகையாக தான் சரியாக செய்கிறேனா இல்லையா என்பது தெரியாததால் கொஞ்சம் எக்ஸ்பிரஷன் அதிகமாக கொடுத்து அந்த இடத்தை நிரப்ப முயற்சித்தது உண்டு என்றும்,

ஆனால் ரசிகர்கள் அதை விரும்புவதாலும் தனது அதிர்ஷ்டத்தாலும் அது நல்லபடியாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது” என்று ஜோதிகா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஜோதிகா பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி ஆகி வருகிறது.

Poorni

Recent Posts

அந்த மாதிரி ஐடியா இல்லங்க.. ஐசிசி சாம்பியன் டிராபியில் இந்தியா படைத்த மொத்த சாதனைகள்!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…

12 minutes ago

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

15 hours ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

16 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

18 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

19 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

20 hours ago

This website uses cookies.