சூர்யாவை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்கிய ஜோதிகா…. எந்த படத்திற்கு தெரியுமா?

Author:
11 November 2024, 5:15 pm

சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது தான் காக்க காக்க. இந்த திரைப்படத்திற்கு இன்று வரை மவுஸ் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இவர்கள் இருவரும் காதலித்துக் கொண்டு இருந்த சமயம் அது என்பதால் ரொமான்டிக் காட்சிகளில் ரியலாகவே சூர்யா ஜோதிகா ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடியிருப்பார்கள்.

surya jyothika

அதை அவர்களாகவே பேட்டியில் வெளிப்படையாக கூறியிருந்தார்கள். இந்த நிலையில் கங்குவா படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் இந்த படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் சூர்யா காக்க காக்க திரைப்படத்தில் ஜோதிகாவுக்கு என்னை விட மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் கொடுத்தார்கள் .

Kaakha-Kaakha1

அதிலும் இந்த படத்தில் ஜோதிகாவுக்கு குறைந்த காட்சிகளே இருந்தது. இடையில் வில்லன்களால் அவர் கொல்லப்பட்டு விடுவார். இருந்தாலும் அவர் சிறப்பாக நடித்ததற்காக மூன்று மடங்கு சம்பளம் கொடுக்கப்பட்டது என்றார் . இதைக் கேட்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்து விட்டனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!