புகுந்த வீட்டில் சண்டையா?; மும்பையில் செட்டில் ஆகக் காரணம்; உண்மையை போட்டுடைத்த ஜோதிகா,..
Author: Sudha14 July 2024, 4:54 pm
தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா.விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான “காதல் தி கோர்” என்ற மலையாளத் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பினைப் பெற்றது.
தற்போது மாதவன், அஜய் தேவ்கன் உடன் ஜோதிகா நடிப்பில் ‘சைத்தான்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஹிந்தியில் இணையத்தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.
பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார் நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன “சர்பிரா” படத்தை தயாரித்திருந்தனர் சூர்யா ஜோதிகா.படம் கடந்த 12 ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.
சூர்யா ஜோதிகா இருவரும் சூர்யாவின் பெற்றோருடன் ஏற்பட்ட பிரச்சினையால் மும்பை சென்று விட்டதாக பலரும் பேசி வந்தனர். குழந்தைகளையும் அங்கேயே பள்ளியில் சேர்த்து விட்டனர்.
இந்நிலையில் சேனல் ஒன்றுக்கு ஜோதிகா பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் ஜோதிகா மும்பையில் செட்டில் ஆனதற்கான காரணம் கேட்கப்பட்டது. கேள்விக்கு பதில் அளித்த ஜோதிகா கொரோனா காலகட்டத்தில் தன்னுடைய பெற்றோர்கள் பல முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களுடைய கடைசி காலத்தில் அவர்களுடன் சிறிது காலம் இருக்க ஆசைப்பட்டேன் அதனால்தான் மும்பைக்கு இடம் வந்தேன் எனக் கூறி இருந்தார்.