ஜோதிகா சொன்னத ஏத்துக்க முடியல…’ஜெய்பீம்’ பட நடிகை வருத்தம்.!
Author: Selvan17 February 2025, 5:12 pm
சூர்யா சாரை விட நான் நல்லா நடிச்சனா
கொரோனா காலகட்டத்தில் 0TT-யில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய்பீம்,இப்படம் தியேட்டரில் மட்டும் ரிலீஸ் ஆகி இருந்தால் சூர்யாவிற்கு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்திருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படியுங்க: அவன படத்துல இருந்து தூக்குங்க… படப்பிடிப்பில் காண்டான கவுண்டமனி.!
ஞானவேல்ராஜா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தை சூர்யாவின் 2D ENTERTAINMENT நிறுவனம் தயாரித்தது,ஒரு சமுதாயத்தில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

இந்த நிலையில் தற்போது படத்தில் செங்கனியாக நடித்த லிஜோமோல் ஜோஸ் நேர்காணல் ஒன்றில் ஜெய்பீம் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.அதில் படம் ரிலீஸ் ஆன பிறகு,ஜோதிகா மேடம் என்கிட்ட வந்து சூர்யா சார் நடிப்பை விட உங்க நடிப்பு சூப்பரா இருந்துச்சுனு சொன்னாங்க,அதுவும் என்கிட்ட பர்சனலா சொன்னதுனால எனக்கு ரம்பா சந்தோசமா இருந்தது,ஆனால் சூர்யா சாரை விட நல்ல நடிச்சு இருக்கீங்கன்னு சொன்னது என்னால ஏத்துக்க முடியல கஷ்டமா இருந்தது என அந்த பேட்டியில் கூறியிருப்பார்.