ஓரமா போங்க Lady Superstar… சொத்து மதிப்பில் நயன்தாராவையே பின்னுக்கு தள்ளிய ஜோ!

Author: Rajesh
18 December 2023, 6:48 pm

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் சினிமாவிற்கு முடிவுகட்டிய ஜோதிகா இப்போது 2.o வெர்ஷனில் இரண்டாவது இன்னிங்சில் நடித்து வருகிறார். இதனிடையே இந்தி படங்களில் நடிக்க கவனம் செலுத்தி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

இதனிடையே, தமிழில் பல படங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும், மலையாளம், இந்தி மொழிகளில் நடித்தும் வருகிறார் ஜோதிகா. பிரேக் எடுத்திருந்தபோது கூட சூர்யாவுடன் விளம்பர படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் ஜோதிகாவின் சொத்து விவரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கும் ஜோதிகா ஆண்டுக்கு 20 முதல் 30 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்.

இதுதவிர சென்னையில் 2000 சதுர அடிக்கு பங்களா, மும்பையில் ரூ. 70 கோடிக்கு அப்பார்ட்மெண்ட், சொகுசு கார்கள் என மொத்தம் ரூ. 330 கோடி சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் ஜோதிகா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சொத்தே ரூ. 183 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 472

    0

    0