சூர்யாவை கடனாக கேட்ட ரசிகை.. உடனே நடிகை ஜோதிகா செய்த செயல்..!

Author: Vignesh
22 March 2024, 5:03 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.

அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

jyothika-surya updatenews360

இதையடுத்து, சில தினங்களுக்கு முன்னர் சூர்யா தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கி குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார்.

காரணம் பிள்ளைகளின் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் தான் என செய்திகள் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் ஜோதிகாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

jyothika

இந்நிலையில், மீண்டும் சினிமாவில் ஜொலிக்கவேண்டும் என்பதற்காக தனது எடையை குறைக்க முடிவெடுத்து தீவிர ஒர்கவுட்டில் இறங்கி இருக்கிறார் ஜோதிகா. மேலும், பாலிவுட் படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஜோதிகா தான் நடித்த சைத்தான் படத்தில் நடித்ததற்கு ஒரு பதிவினை போட்டிருந்தார். அந்த பதிவில், சூர்யாவின் தீவிர ரசிகை ஒருவர் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் எப்படி சூர்யாவை ஒரு காட்சியில் ஒரு நாளைக்கு கடனாக கொடுத்தாரோ அதேபோல், என்னிடம் சூரியசாரை ஒருநாள் கொடுங்கள்.

ஏனென்றால், 15 ஆண்டுகளாக சூர்யா சாரின் ரசிகையாக இருந்து வருகிறேன் என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு நடிகை ஜோதிகா அதற்கெல்லாம் அனுமதி இல்லை என்று ஒரு பதிலை ரிப்ளைவாக கொடுத்துள்ளார். அவரது பாசிட்டிவான இந்த மனப்பான்மை ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

jyothika-updatenews360

மேலும், அந்த ரசிகை அவர் எப்போதும் உங்களுடையவர்தான் சூர்யா பெயர் இருந்ததற்காக இதற்கு ரிப்ளை செய்தீர்கள் என்று ஹாஸ்டின் எமோஜியும் அனுப்ப அதற்கும் ஜோதிகா ஹார்டின் எமோஜி அனுப்பி ரிப்ளை செய்திருக்கிறார். இந்த பதிவுகளை பார்த்து ரசிகர்கள் ஜோதிகாவை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 327

    0

    0