ஆமா.. அந்த படத்தில் வேணும்னு தான் ஓவர் ஆக்ட் பண்ணேன்..-நடிகை ஜோதிகா ஓபன் டாக்..!

Author: Vignesh
22 May 2023, 1:16 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.

அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

jyothika-surya updatenews360

சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜோதிகா விஜயுடன் நடித்த குஷி படத்தின் அனுபவம் குறித்து பேசி உள்ளார்.

ஜோதிகா அளித்த பேட்டியில் கூறியதாவது, “குஷி படத்தின் கதை பற்றி இயக்குநர் கூறியபோது அந்த காலத்து ஹீரோக்கள் போல கொஞ்சம் அதிகமாகவே நடிக்க வேண்டும் என்றும், ஈகோ கொண்ட அனைவருமே கோபமாக மற்றவர்களை பார்த்து லுக் விடுவார்கள் என்றும், ஆனால் குஷியில் வேண்டுமென்றே அது கொஞ்சம் ஓவராக இருக்க வேண்டும் என நினைத்ததாக” ஜோதிகா தெரிவித்துள்ளார்.

jyothika -updatenews360

இதனை தொடர்ந்து, ஜோதிகா பேசியதில், “இதுகுறித்து பலர் தன்னிடம் கூறி இருக்கிறார்கள் எனவும், அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ததாகவே நினைப்பதாகவும், முகவரி போன்ற மற்ற படங்களில் அப்படி நடிக்கவில்லை என்றும், தமிழ் தனக்கு அந்த அளவிற்கு தெரியாததால் அதை பேலன்ஸ் செய்வதற்கு என்பதால் சில சமயங்களில் தான் ஓவர் ஆக்டிங் செய்து நடித்தது உண்மைதான் என்று தெரிவித்தார்.

jyothika -updatenews360

மேலும், ஒரு நடிகையாக தான் சரியாக செய்கிறேனா இல்லையா என்பது தெரியாததால் கொஞ்சம் எக்ஸ்பிரஷன் அதிகமாக கொடுத்து அந்த இடத்தை நிரப்ப முயற்சித்தது உண்டு என்றும், ஆனால் ரசிகர்கள் அதை விரும்புவதாலும் தனது அதிர்ஷ்டத்தாலும் அது நல்லபடியாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது” என்று ஜோதிகா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

jyothika -updatenews360

ஜோதிகா பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி ஆகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!