ஆத்தீ.. ஜோதிகா இம்புட்டு கோவக்காரங்களா.. படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தால் விஜய்யை தூக்கி எறிந்த ஜோ..!

Author: Vignesh
28 March 2023, 11:30 am

ஹிந்தி திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய ஜோதிகா, வாலி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி, முகவரி என டாப் ஹீரோக்களுடன் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார். விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினி என டாப் ஹீரோக்கள் ஜோடியாக நடித்து கனவு தேவதையாக மாறினார்.

lip balm updatenews360

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனிடையே, நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட நடிகர் சூர்யாவுடன் காதலில் விழுந்தார். பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.

surya jyothika - updatenews360

இருவீட்டாரின் சம்மதம் பெற்று திருமணம் செய்த இந்த நட்சத்திர தம்பதிக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு, படங்களில் நடிக்காமல் இருந்து வந்த பல வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, ராட்சசி, தம்பி, உடன்பிறப்பே போன்ற படங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்தார் ஜோதிகா.

surya jyothika - updatenews360

இதனிடையே, ஜோதிகா விஜய் படத்தினை ஒதுக்கியது பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 2017ல் அட்லீயின் இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனனுக்கு முன் ஜோதிகாவை தான் கமிட் செய்து இயக்குனர் வைத்திருந்தார்.

vijay jyothika-updatenews360

இதனிடையே, கதையில் சில மாற்றங்களை அட்லீயிடம் ஜோதிகா கூறியிருந்த நிலையில், அட்லீ அதை மாற்ற முடியாது என்று ஸ்ட்ராங்காக கூறிவிட்டதாக தெரிகிறது.

vijay jyothika-updatenews360

இதனால் ஜோதிகா இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று விஜய்யிடம் சொல்லாமலே அங்கிருந்து கிளம்பியதோடு படத்தில் இருந்தும் விலகிவிட்டாராம். இந்த சம்பவம் விஜய்க்கு மன கஷ்டத்தை கொடுத்திருந்ததாகவும், பல ஆண்டுகள் கழித்து ஜோதிகாவுடன் இணையவுள்ளோமே என்று விஜய் சந்தோஷத்தில் இருந்த நிலையில், விஜய் வருத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 802

    1

    0