என்னுடைய கணவர் திரைப்படங்களைப் பொறுத்தவரை, கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன் என நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.
மும்பை: நடிகை ஜோதிகா நடிப்பில், சமீபத்தில் டப்பா கார்டெல் என்ற இந்தி வெப் சீரிஸ் வெளியானது. இந்தப் படத்தில் ஷாலினி பாண்டே, நிமிஷா சஜயன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “எனக்கு மோசமான திரைப்படங்களில்தான் பிரச்னை.
பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றியைப் பெற்ற பல மோசமான கமர்ஷியல் திரைப்படங்களை நான் பார்த்துள்ளேன். அந்தத் திரைப்படங்களெல்லாம் பெரிய மனதுடனே விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், என்னுடைய கணவர் திரைப்படங்களைப் பொறுத்தவரை, அது கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன்.
மேலும், படத்தின் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மொத்தமாக படத்திற்கு பெரும் சிரத்தைக் கொடுத்து உழைத்திருக்கின்றனர். ஆனால், சில மோசமானப் படங்களைவிட கடுமையான விமர்சனங்களைச் சந்தித்ததை பார்த்தபோது, அது என்னை மிகவும் பாதித்தது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஜோதிகா மும்பை சென்றதில் இருந்தே தென்னிந்திய சினிமா பக்கமே திரும்பவில்லை எனக் கூறப்பட்டது. இதற்கு, அவரது மாமனாரும், நடிகருமான சிவகுமாரே காரணம் எனக் கூறப்பட்டாலும், இதனை மறுத்து இருவேறு காரணங்களைக் கூறினர் சூர்யா – ஜோதிகா தம்பதி.
இதையும் படிங்க: 3வது திருமணம் செய்ய ஆசை.. முன்னாள் காதலனை வைத்து 2வது கணவர் கொலை!
இவ்வாறான நிலையில், முன்னதாக இந்த வெப் சீரிஸ் தொடர்பான பேட்டியில் பேசிய ஜோதிகா, “நான் தென்னிந்திய சினிமாவில் இருந்து வருகிறேன். அங்கு ஆண்களை முன்னிலையாகக் கொண்ட படங்கள்தான் அதிகம் வருகின்றன. இப்போது மாற்றங்கள் வந்துள்ளன. பாலிவுட்டிலும் மாற்றங்கள் வந்திருக்கின்றன.
தென்னிந்தியாவில் பெரும்பாலும் ஆண்களுக்காகத்தான் அதிகம் கதை எழுதப்பட்டிருக்கும். பெண்கள் கதாபாத்திரம் முழுமை அடைந்ததாக இருக்காது. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை, பெண்கள் நடனமாடவும், ஆண்களை புகழவும் தான் பயன்படுத்தப்படுகின்றனர். அது இப்போதும் உள்ளது” எனக் கூறியிருந்தார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.