“சின்ன பையன் சிம்பு”…..ரொம்ப பிடிக்கும் – சீக்ரெட் விஷயத்தை கூறிய ஜோதிகா!
Author: Rajesh27 December 2023, 6:10 pm
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை. படத்தின் மூலமாக ஹீரோவாக அதிகமான சிம்பு தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்திருந்தார். குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் லிஸ்டில் இவர் பெயரும் இணைந்து விட்டது. சிம்பு இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பல பரிமாணங்களிலும் தனது வெற்றியை நிலைநாட்டிய ஒருவர் என்று சொல்லலாம்.

இவர் நடிப்பில் கடைசியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, 40 வயது ஆகியும் நடிகர் சிம்பு திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். சினிமாவில் நுழைந்து நல்ல நல்ல படங்கள் நடித்துவந்த இவர் இடையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், சரியாக படங்கள் நடிக்காமல் இருந்தார். இப்போது, தான் மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு குறித்து ஜோதிகா ஸ்வாரஸ்யமான சில தகவல்களை கூறியுள்ளார். ஆம் கடந்த சில நாட்களாக ஜோதிகாவின் லேட்டஸ்ட் நேர்காணல் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பல விஷயங்கள் குறித்து பேசிய ஜோதிகா சிம்பு குறித்து பேசியபோது, ” சிம்பு என்னைவிட ரொம்ப சின்ன பையன் தான்.

நான் நடித்ததிலே இளம் ஹீரோக்களில் சிம்பு தான். அவர் ரொம்பவே ஓபன் டைப் பெர்சன். அதனால் எனக்கு வரை ரொம்ப பிடிக்கும். பல வருடங்கள் கழித்து நாங்கள் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்திருந்தோம். ஜோடியாக இல்லை என்றாலும் ஒரு சில காட்சிகளில் அவருடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம் , மறக்கமுடியாதது என கூறினார். ஜோ சொல்வதை பார்த்தால் மீண்டும் மன்மதன் திரைப்படம் போன்று ஒரு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தால் ரசிகர்கள் புத்துணர்ச்சியோடு கொண்டாடுவார்கள்.