இனிமே என் படத்துல நடிக்க வந்துராத… வாங்கிய அட்வான்ஸை விட்டெறிந்த ஸ்ரீகாந்த்..!

Author: Vignesh
2 July 2024, 8:22 pm

2000ம் காலகட்டத்தின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் டாப் இளம் ஹீரோவாக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து பார்த்திபன் கனவு, ஜூட், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, பூ, மந்திரப் புன்னகை, நண்பன் உள்ளிட்ட பல பங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு பேட்டி அளித்த ஸ்ரீகாந்த் அந்த பேட்டியில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அப்படி ஒரு பேட்டியில் இயக்குனர் மணிரத்தினத்தைப் பற்றி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது ஸ்ரீகாந்த் ஆனால், அதற்கு டெஸ்ட் ஷூட் எல்லாம் நடந்து மணிரத்தினம் ஸ்ரீகாந்த்தை ஓகே செய்து இருக்கிறார்.

Srikanth

அதே நேரம், மனசெல்லாம் படத்தில் ஒரு ஃபயர் ஆக்ஸிடென்டில் மாட்டிக் கொண்டாராம் ஸ்ரீகாந்த். அப்போது, அவர் முகத்தில் நெருப்புப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். இந்த பக்கம் ஸ்ரீகாந்த் மருத்துவமனையில், இருப்பதை ஒரு அட்வான்டேஜ் ஆக எடுத்துக்கொண்டு மனசெல்லாம் படத்தின் தயாரிப்பாளர் மனசெல்லாம் படத்திலும் அதற்கு அடுத்தபடியாக ஒரு படத்திலும் நடித்துக் கொடுத்துவிட்டு தான் வேறு படங்களில் நீ கமிட்டாக வேண்டும் என அக்ரிமெண்ட் போட்டு விட்டாராம்.

அதனால், ஆயுத எழுத்து படத்தில் ஸ்ரீகாந்தால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அது மட்டுமல்லாமல் ஆயுத எழுத்து படத்திற்காக வாங்கிய அட்வான்ஸை ஸ்ரீகாந்த் அந்த நேரத்தில் திருப்பிக் கொடுக்க அதை பார்த்த மணிரத்தினம் என்னை மிகவும் இன்சல்ட் பண்ணுகிற மாதிரியான ஒரு செயல் இனிமேல் உன்னை வைத்து நான் படமே எடுக்க மாட்டேன் என்று முகத்துக்கு நேராகவே மணிரத்தினம் சொல்லிவிட்டாராம். அன்றிலிருந்து இன்று வரை மணிரத்தினம் படத்தில் ஸ்ரீகாந்துக்கு எதுவுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!