கே.பாக்யராஜ் துரத்தி துரத்தி காதலித்த பிரபல நடிகை: அந்த மோதிரத்தின் ரகசியம் இதுதானா?..

Author: Vignesh
24 March 2023, 11:59 am

இயக்குனர் பாக்யராஜ் இயக்குனராகவும் கதை திரைக்கதை வசன கர்த்தாவாக மிகவும் கைத்தேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய பாக்யராஜ் தன் மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யாவை சினிமாத்துறையில் அறிமுகப்படுத்தினார்.

Saranya Bhagyaraj-updatenews360

இந்நிலையில், 1981ம் ஆண்டு கே.பாக்யராஜ், பிரவீனா இருவரும் நண்பர்களாக இருந்து திருமணம் செய்துகொண்டனர். எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட திரை பிரபலங்களின் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில், எதிர்பாராதவிதமாக திருமணம் நடந்த இரண்டே ஆண்டுகளில் பிரவீனா மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

இதனால், உடைந்துபோன இயக்குனர் பாக்யராஜ், அதன் பின்னர் முதல் காதலில் இருந்து மீண்டு வந்து நடிகை பூர்ணிமாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் பிரவீனாவை மறக்க முடியாத கே பாக்யராஜ், அவர் அன்பளிப்பாக கொடுத்த மோதிரத்தை இன்றும் தனது விரலில் அணிந்துள்ளது உள்ளார்.

bhagyaraj-poornima-praveena -updatenews360

மேலும், அந்த மோதிரத்தை பாக்யராஜ் இதுவரை எந்த காரணம் கொண்டும் கழட்டியதே இல்லையாம். அதுமட்டும் இல்லாமல் அவரது அலுவலகத்தில் பிரவீனாவின் புகைப்படத்தையும் வைத்து இன்றுவரை பாதுகாத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, முதல் காதல், முதல் மனைவி பிரவீனாவின் நினைவாக 40 ஆண்டுகளாக அதே மோதிரத்துடன் பாக்யராஜ் வலம் வருவது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!