கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படம் பருத்தி வீரன். அமீர் இயக்கத்தில் கார்த்திக் , பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தை இயக்கிய அமீரால் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் கூறியதற்கு அமீர் நீண்ட அறிக்கையுடன் விளக்கம் அளித்து பிரச்சனை குறித்து எல்லோருக்கும் தெளிவு படுத்தினார்.
இதையடுத்து இயக்குனர் அமீருக்கு பலரும் ஆதரவு குரல் கொடுத்து ஞானவேல் ராஜாவை திட்டி தீர்த்தனர். படம் பணம் இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட சமயத்தில் அமீர் அங்கும் இங்குமாக கோடிக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கி படத்தை வெளியிட்டுள்ளார் என்றெல்லாம் பலர் கூறினார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ள ஞானவேல் ராஜா,
“பருத்திவீரன் படத்தின் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்துகொண்டு இருகிறது. இதுநாள் வரை அதை பற்றி நான் பேசியது கிடையாது. என்றைக்குமே அவரை நான் அமீர் அண்ணா என்று தான் அழைப்பேன். ஆரம்பித்தில் இருந்தே அவர் குடும்பத்தினருடன் நெருங்கிய பழகி இருக்கிறேன். சமீபத்திய பேட்டிகளில் என்ன குறித்து அவர் கூறிய பொய்யான குற்றசாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது”.
அதற்கு பதிலளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அமீர் அண்ணன் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்” என அறிக்கையில் குறிப்பிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.