பெரிய நடிகையாக வேண்டுமென்றால் படுக்கையை பகிர்ந்துதான் ஆக வேண்டும் : சர்ச்சை பேச்சில் சிக்கிய பிரபல தயாரிப்பாளர்!!
Author: Vignesh31 October 2022, 7:00 pm
பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன். எந்த சமரசமும் இல்லாமல் பெரிய நடிகர்கள் நடிகைகள் என அனைவரையும் விளாசி வருகிறார். குறிப்பாக நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு அவர்களால் வளர்ந்த நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.
அவருடைய பேச்சு பலமுறை சர்ச்சையாகவும் முடிந்துள்ளது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துதான் ஆகவேண்டுமா? இந்த நிலையை தயாரிப்பாளராக நீங்கள் மாற்ற முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கே ராஜன், வேறு வழியே இல்லை என்று தடாலடியாக கூறியுள்ளார். அந்த கரைக்கு போக வேண்டும் என்றால், நடுவில் இருக்கும் சேரை மிதித்துதான் போக வேண்டும். அதேபோல் சினிமாவில் பெரிய நடிகை ஆகவேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒத்துக்கத்தான் வேண்டும் என்று கூறியுள்ளார்.
திறமைக்கெல்லாம் இங்கு மதிப்பில்லை, அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்றால் செய்துதான் ஆகவேண்டும். ஆனால் சில நடிகைகள் கறாராக உள்ளனர். அதுவும் தமிழ் நடிகைகள் ஸ்ட்ரிடிக்ட்டாக உள்ளனர். வேறு மாநிலத்தில் இருந்து வரும் நடிகைகள் அதற்கு சம்மதித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் தயாரிப்பாளர்கள் எல்லாம் பாவம் என்ற அவர், அனுபவிப்பது ஒன்று நடிகர்கள் அல்லது இயக்குநர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மூத்த தயாரிப்பாளரான கே ராஜனின் இந்த பேச்சு சினிமா வட்டாரத்தில் பரபரப்ரப ஏற்படுத்தியுள்ளது.