அடத் தூ… எல்லாத்தையும் அப்பட்டமா காட்றாங்க.. வெப் சீரிஸ்களை விளாசிய பிரபல தயாரிப்பாளர்..!

Author: Vignesh
17 October 2022, 4:00 pm

பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா, ட்ரெயிலர் வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகளை விளாசி வருகிறார்.

பெரும்பாலும் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் கே ராஜன், யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் வெப் சீரிஸ்களை வச்சு செய்துள்ளார். அதாவது வெப் சீரிஸ்கள் கேவலமாக உள்ளன என கூறியுள்ள கே ராஜன், அவற்றுக்கு சென்சார் இல்லை என்பதால் கன்னாபின்னாவென வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

k rajan_updatenews360

வெப் சீரிஸ்களில் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள், பாலியல் காட்சிகளை அப்படியே அப்பட்டமாக காட்டுகிறார்கள் என்று கூறியுள்ள கே ராஜன், அவற்றில் வெட்டுக்குத்து அதிகம் என்றும் கூறியுள்ளார். வெப் சீரிஸ்கள் படு மட்டமாக உள்ளது என்று கூறியுள்ள கே ராஜன் அவற்றிற்கும் கட்டுப்பாடுகளும் சென்சாரும் வேண்டும் என கேட்டுள்ளார்.

குழந்தைகள் இரவில் வெப் சீரிஸ்களை பார்த்து சீரழிவதாகவும் பண்பாடும் சீரழிவதாகவுத் தெரிவித்துள்ளார் கே ராஜன். மேலும் இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன் என்றும் எச்சரித்துள்ளார் கே ராஜன்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 540

    0

    0